மண் சுமந்த மகேசன் - கிழக்கிலங்கையின் முதல் சின்னத்திரை

‘மண் சுமந்த மகேசன்’ சின்னத்திரை வீடியோ நாடகமாகும்.  இந்நாடகத்தின் உள் அரங்கக் காட்சிகள் ஆரையம்பதியிலும், வெளிப்புறக் காட்சிகள் மண்முனைப் பிள்ளையார் கோயிலடி ஆற்றங்கரையிலும்  படம் பிடிக்கப்பட்டன. ஆரையம்பதி திரு.சீ.செல்வநாயகம் அவர்களின் படப்பிடிப்பில் உருவான இப்படத்தின் கதை வசனம் டைரஷ்சன் என்பவற்றை ஆரையூர் இளவல் அவர்களுடையதாகும்.  

ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் முன்றலின் திருவிழங்கு குடி மக்களின் ஆதரவில் 1980 ஆம் ஆண்டு மாணிக்கவாசர் குருபுசை தினம் ஒன்றில் வெளியிடப்பட்ட இவ் சின்னத்திரை ஆயிரத்திற்கு மேற்பட்ட தடவைகள்  மட்டக்களப்பின் ஆலய அரங்குகளிலும், பொது அரங்குகளிலும் காட்சியாக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது  எமது ஆவணமாக்கல் முயற்சியாகும், “கதைபேசி காலம் கடத்தலை விடுத்து காத்திரமான  செயற்பாடு” என்பதே எமது குறிக்கோள்.  தனது கலை வரலாற்றுப்பயணத்தில் ஆரையம்பதி மண்  பெருமைகொள்ளும் இன்னுமோர் ஆவணம் இது...

இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் கிழக்கிலங்கையின் முதல் சின்னத்திரை என்ற பெருமையை பெற்றுக்கொண்ட இந்த வீடியே நாடகத்தை நீண்ட காலமாக ஆரையூர் இளவல் அவர்கள் வீடியே நாடாவாக பாதுகாத்து வந்திருந்தார். கடந்த வருட முற்பகுதியில் குறித்த வீடியே நாடாவை அவரிடம் இருந்து பெற்று இருந்தேன். குறித்த விடியே நாடா மிகவும் பழுதடைந்த நிலையிலே இது உருமாற்றம் கண்டுள்ளது.

பல்வேறு தடங்கலுடன் நகரும் இந்த வரலாற்று ஆவணத்தை கண்டு மகிழ்வீர்.... ஈழத்தின் மூத்த நாடக நெறியாளர் காலம் சென்ற “ஆரையூர் இளவல்” அவர்களுக்கு சமர்ப்பணம்.

நடிகர்கள்

திரு.சி.சந்திரசேகரம் ( மண்சுமந்த மகேசன் )
திருமதி தங்கம்மா சந்திரசேகரம் ( செம்மனச்செல்வி )
திரு.செ.அரசரெத்தினம் ( சிவபெருமான் )
செல்வி. புனிதமலர் (உமாதேவி )
செல்வி.ஸ்ரீமலர் ( கங்காதேவி )
சைவப்புலவர் சோமசுந்தரம் ( பாண்டியமன்னன் )
செல்வி ஈஸ்வரி காசிப்பிள்ளை ( பண்டிமாதேவி )
திரு.மு.கணபதிப்பிள்ளை (பிரதம அதிகாரி)
திரு. த.பரமக்குட்டி ( திருவாதவுர்அடிகள் )
திரு.க. கார்த்திகேசு, திரு.அரிசந்திரகுமார் ( தளபதி )

உடை
திரு.ச.சூசைப்பிள்ளை

ஒப்பனை
திரு.செ.அரசரெத்தினம்
திரு.க. கார்த்திகேசு
திரு.தனலெச்சுமி கோணாமலை
திருமதி தங்கம்மா சந்திரசேகரம்
திரு.த.சோமஸ்கந்தராசா

கலை
திரு.செ.அரசரெத்தினம்
திரு.க. கார்த்திகேசு
செல்வன்.சா.தவராஜா

இசை
இலங்கேஸ்வரன் புகழ் திரு.க.சுந்தரலிங்கம்
திரு.செ.செல்வராசா

பாடல்கள்
ஆரையுர் இளவல்
அன்புமணி

பின்னணி
திருமதி தங்கம்மா சந்திரசேகரம்
திரு.த.பரமக்குட்டி

நிருவாகம்
திரு.ந.கோணாமலலை

நிருவாக உதவி
திரு.தனலெச்சுமி கோணாமலை
திரு.சா.கனகசுந்தரம்
சாந்தன் சபா


ஒலி-ஒளி அமைப்பு தயாரிப்பு
திரு.சீ.செல்வநாயகம்

ஒலி ஒளி அமைப்பு உதவி
செல்வன்.கோ.கிருபானந்தராஜா
செல்வன்.பு.புரிஷோத்தமன்
செல்வன்.சீ.சுதா
செல்வன் .க.தயா
செல்வன்.கோ.சிறி

கதை வசனம் டைரஷ்சன்
ஆரையூர் இளவல்


- பிரசாத் சொக்கலிங்கம்-
நன்றி : arayampathy.lk