எம்மைப்பற்றி

வணக்கம்,

       முதுசொம் என்பது, பொதுவாக முந்திய தலைமுறையிலிருந்து கிடைக்கும் சொத்தைக் குறிக்கிறது. மேலும் முதுபொருள், பூர்வீகச் சொத்து எனவும் பொருள்பெறும். ஒருவர் தான் உழைத்துச் சேர்க்கும் சொத்திலிருந்து இது வேறுபடுகிறது. இது மருவி  முதிசம், முதுசம் என்றும் வழங்கி வருகிறது.

  அம்மியும் குழவியும் காணும் கடைசி சந்ததி நாமாகத்தான் இருப்போம் என்பது ஜீரணிக்க முடியாத ஒரு கசப்பான உண்மை. இந்த நிலை காலத்தின் தேவையாக இருந்தாலும்  எம் முன்னோர்களின் தொழிநுட்பமும் திறனும் வியக்கத்தக்கதஆகும். அவசர உலகுக்கு அவை பொருந்தாவிடினும் மனிதவாழ்வுக்கும் சூழலுக்கும் பயனுள்ளதும் பாதிப்பற்றதும் ஆகும். அவசர வாழ்வு என்பது நாம் ஏற்படுத்தியது தானே?
   இருந்தாலும் அழிந்து போகின்ற என்பதை விட எம்மால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற எமது பண்பாடு , விழுமியங்கள் , கலைகள் என்பவற்றை எம்மால் இயலுமான வரையில் இயலுமான வடிவங்களில் எமது அடுத்துவரும் சந்ததியினருக்குக் கொடுக்கும் ஒரு முயற்சியே இது. இவ் இணையத் தளத்திற்கு பங்களிப்புச் செய்ய ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் இணையலாம். அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களை எமக்கு அறிமுகப்படுத்தலாம் மற்றும் உங்கள் மேலான கருத்துக்களை எமக்குத் தரலாம் அவை மிகவும் வரவேற்கப்படுகின்றன.

தொடர்புகளுக்கு :
அலைபேசி  : +94773620328 (மதன்)
                            +9477 2276543 (சௌந். லெனாட். லொறன்ஸோ)
Facebook          : facebook.com/muthusam
Email                : msmathan@gmail.com

full-width