இன்று( 16.01 2017) கதிரவன் கலைக்கழகம் நடத்திய கலைஞர் கௌரவமும் பட்டிமன்றமும் மட்/நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் பிற்பகல் 2.30மணிக்கு நடைபெற்றது.
"தமிழர் பண்டிகைகள் களைகட்டியது அக்காலத்திலா? இக்காலத்திலா"எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற்றது . பட்டிமன்றத்தின் தலைமைப் பேச்சாளராக பாடும்மீன் சு.சிறிகந்தராசா அவர்கள் பங்குபற்றியதுடன் அக்காலத்தில் என்று அகரம் செ.துஜியந்தன், பாலமீன்மடு இரா கலைவேந்தன், நடராசா தர்சினி ஆகியோரும், இல்லை இக்காலத்தில் என்று அன்பழகன் குரூஸ், சிவவரதகரன், கவிஞர் ஜீ. எழில்வண்ணண் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
தொடர்ந்து மட்டக்களப்பு மண்ணிண் மூத்த கலைஞர்கள் "கதிரவன்விருது" கொடுத்துக் கௌரவிக்கப்பெற்றனர்.