திரு.சிவஞானம் மகேந்திரராஜா அவர்களின் "கிராமியக் கலைக்கதிர்"நூல் அறிமுக விழாவும் இசைநிகழ்ச்சியும்

    மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய திரு.சிவஞானம் மகேந்திரராஜா அவர்களின் "கிராமியக் கலைக்கதிர்" நூல் அறிமுக விழாவும் இசைநிகழ்ச்சியும் 23/10/2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30மணிக்கு மட்/நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தலைவர் சட்டத்தரணி மு.கணேசராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 
    இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக திரு கி.துரைராசசிங்கம்(கவிஞர் அண்ணாதாசன்,கௌரவ விவசாய அமைச்சர்) அவர்கள் கலந்து கொண்டார். 
 சிறப்பு விருந்தினர்களாக தமிழ்ச் சங்க காப்பாளர் கலாபூசணம் செ.எதிர்மண்ணசிங்கம், பாடும்மீன் சு.சிறிகந்தராசா, பொதுச்சுகாதார பரிசோதகர் பொன். மனோகரன்  ஆகியோர் பங்குபற்றினர். நூலின் முதற் பிரதியினை சைவப்புரவலர் வி. றஞ்சிதமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொள்ள நூல்ஆசிரியர் பற்றிய அறிமுகத்தினை மதுவரித்திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி ச.தங்கராசா நிகழ்த்தினார். நூல் நயவுரை தமிழ்ச்சங்க துணைச்செயலாளர் வே. தவராசா அவர்கள் வழங்க விழா சிறப்பாக நடைபெற்றது.
(கதிரவன்)