தமிழர் திருநாள் 2016

தமிழர்களுக்கான பண்டிகையாக தைப்பொங்கல் விளங்குகின்றது. இதனை எந்தவொரு மதத்தைச் சேர்ந்த தமிழர்களும் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் கிழக்கிலங்கையில் பல கிருஸ்தவ தேவாலயங்களில் இப்பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடியதை எம்மால் அவதானிக்க முடிந்தது. அதில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் அமைந்துள்ள திரேசாம்மாள் தேவாலயத்தில் இடம்பெற்ற பண்பாட்டுத் திருப்பலியுடன் கூடிய பிராத்தனைகளை நாம் ஆவணப்படுத்தியுள்ளோம். இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் தமிழர் பாரம்பரிய உடையுடன் கலந்துகொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் வாசலில் வாழை கட்டியும் கோலமிட்டும் குருத்துக் கட்டியும் தேவாலயம் அலங்கரிக்கப்படிருந்தது. இதில் கலந்து கொண்ட அமெரிக்க நாட்டு பெண்மணியொருவரும் தமிழ்ப் பாரம்பரிய உடையுடன் வருகைதந்திருந்தமை எல்லோர் கவனத்தையும் ஈர்ந்தது. 



ஒளிப்பதிவு         : ச.பா. மதன்
பின்னணிகுரல் : சௌந். லெனாட். லொறன்ஸோ
இது ஒரு www.muthusom.com இணையத்தளத்தின் ஆவணப்படுத்தல்