இலங்கையை ஆட்சிசெய்த இறுதி நான்கு மன்னர்களும் தமிழர்களே!

விக்கிரம இராஜசிங்க மன்னன்
சுப்பிரமணியம் ரமேஸ்

இலங்கையை ஆண்ட கண்டி இராச்சியத்தின் இறுதி மன்னன் விக்கிரம இராஜசிங்கனின் ஆறாம் தலைமுறையான தற்போது குருநாகலில் வசிக்கும் அரசபரம்பரையைச் சேர்ந்த சுப்பிரமணியம் ரமேஸ் மட்டக்களப்புக்கு வந்திருந்தபோது மட்டக்களப்பு கண்ணகி கலை இலக்கிய கூடல் அமைப்பினரால் வரவேற்கப்பட்டார். செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தலைமையில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில்  அரசபரம்பரையைச் சேர்ந்த சுப்பிரமணியம் ரமேஸ் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கையை ஆண்ட இறுதி நான்கு அரசர்களும் தமிழர்களே எனவும் அதில்  தமிழ் மன்னனான விக்கிரம இராஜசிங்கன் (கண்ணுச்சாமி நாயக்கர்) தமிழர் என்ற காரணத்தினாலே சிங்கள பிரதானிகள் அவரை ஆங்கிலேயரிடம் 1815 இல் காட்டிக்கொடுத்தனர். இது தொடர்பாக கண்டி இராச்சியத்தின் இறுதி மன்னன் விக்கிரம இராஜசிங்கனினதும் எமது அரச பரம்பரையினர் பற்றிய ஆய்வு நூல் ஒன்றினையும் விரைவில் வெளியிடவுளேன். அதில் வரலாற்றில் திட்டமிட்டு மறைக்கப்பட்ட பல சம்பவங்களும் ஆதாரங்களுடன் வெளிவரும் எனவும் தற்போது எமது பரம்பரையின் ஏழாவது தலைமுறையும் உருவாகிவிட்டதாக தெரிவித்தார்.
- செ.துஜியந்தன் -