கிழக்குப்பல்கலைக்கழக கலைகலாசாரபீட நுண்கலைத்துறையின் முதலாம் ஆண்டு மாணவர்கள் நடாத்தும் 'மறுக்கப்படும் மரபுகளுக்கோர் மரபுகாண்பயணம்'

திரு சு.சந்திரகுமார்
கிழக்குப்பல்கலைக்கழக கலை கலாசார பீட நுண்கலைத்துறையின் முதலாம் வருட மாணவர்களுக்கு 'கலையும் தொழில் முனைவும்'; எனும் பாடம் கோட்பாடுகளையும் செயற்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு கற்பிக்கப்பட்டு வருகின்றது. இது மாணவர்களினுடைய அறிவு, திறன், ஆற்றல், நிபுணத்துவங்களை வெளிப்படுத்துவதோடு உள்ளூர் கலை, பண்பாட்டு, பொருளாதாரத்தை மையப்படுத்திய உற்பத்திகளை வலுப்படுத்துவதாகவும் அமைகின்றது.
கலையும் தொழில்முனைவையும் மையப்படுத்திய இப்பாடத்தின் ஒரு பகுதியை நிறைவுசெய்யும் பொருட்டு குறித்த அம்மாணவர்களால் ஆக்கப்பட்டதும் தமது சூழல் சார்ந்து தேடப்பட்டதுமான பல்வகை வித்தியாசங்களைக் கொண்ட ஆக்க வெளிப்பாடுகளைக் கொண்டு ஒவ்வொரு வருடமும் கண்காட்சியும் விற்பனையும் நடைபெறுகின்றது. இது நுண்கலைத்துறையின் வெளிச்சூழலில் நடைபெறுவதோடு பல்கலைக்கழக சமூகத்தினரையும் உள்ளீர்க்க வைக்கின்றது. இதனடிப்படையில் 2016இல் 'மறுக்கப்படும் மரபுகளுக்கோர் மரபுகாண் பயணம்' எனும் தொனிப்பொருளில் நுண்கலைத்துறையின் தலைவர் கலாநிதி வ.இன்பமோகன் அவர்களின் தலைமையில் கண்காட்சியும் விற்பனையும் 2016.03.18 அன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு நுண்கலைத்துறை முன்றலில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்குப் பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கிழக்குப்பல்கலைக்கழக கலைகலாசாரபீட பீடாதிபதி கலாநிதி க.இராஜேந்திரம் அவர்களும் கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் நுண்கலைத்துறையினர்.