கொல்லனுல்லையில் 'சராசந்தன் போர்' வடமோடிக் கூத்து சதங்கையணி விழா சமுதாயம் ஒன்றிணைய கொண்டாடப்பட்டது

மட்டக்களப்பின் பல ஊர்களில் கூத்து ஆடுவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் படி கொல்லனுல்லை ஊர்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பழகிய கூத்தே 'சராசந்தன் போர்' வடமோடிக் கூத்தாகும். இது 13 களரி அடித்து பழக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இதற்கான 'சதங்கைகட்டு விழா' கோலாகலமாக 16.01.2016 அன்று சிறுவர்கள் முதல் பெரியோர் வரை ஒன்றிணைய அவ்வூரில் நிகழ்த்தப்பட்டது. இதற்கு அண்ணாவியாக வைரமுத்து தேவராசா (பாலுகுடி) அவர்களும்; கொப்பியாசிரியராக சிவலிங்கம் அவர்களும் முன்னீடுகாரராக (பஞ்சாயக்காரர்) கோ.கோணேசப்பிள்ளை, க.இன்பராசா அவர்களும் செயற்பட்டனர்.
இந்நிகழ்வுக்கு அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் பங்குகொண்டு மகிழ்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தன்னாமுனையைச் சேர்ந்த சீ.அலக்ஸ்சாண்டர் அண்ணாவியாரும் நுண்கலைத்துறையின் நாடக அரங்கியற் பாட விரிவுரையாளர் திரு.சு.சந்திரகுமார் அவர்களும் சென்று கூத்தர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தமை சிறப்பம்சமாகும்.