மஹாகவி நினைவுகள்

----------மௌனகுரு -----------------------------------------------------------------------------


மஹாகவியை நினைக்கும்போது பழைய நினைவுகள்அலை அலையாக எழுகின்றன.
அவர் மட்டக்களப்புக் கச்சேரியின் O.A(Office Assistant)ஆக 1960 களின் நடுப்பகுதியில் மட்டக்களப்புக்கு வருகிறார்.
அப்போது நான் பல்கலைக் கழகப் படிப்பு முடித்து வந்திருந்தேன்.
எனக்கு அப்போது வயது 22.
O.A க்குரிய பங்களா கிடைக்க முன் மட்டக்களப்பு நகரின்ஒரு அறையில் மஹாகவி தங்கியிருந்தார்.
நான் எனது மைத்துனர் வடிவேல் தீவிரமாக வாசிக்கும் சில இளிஞர்கள் மஹாகவிக்கு அறிமுகமாகிறோம்
அப்போதுதான் முதல் முதல் அவரைச் சந்திக்கிறேன்.
நுஹ்மான் அறிமுகம் செய்து வைக்கிறார்
.நுஹ்மான் கல்முனை ஆனமையினால் எனக்கு மஹாகவியை தினமும் சந்திக்கு வாய்ப்பு மட்டக்களப்பில் கிடைக்கிறது.
நெருக்கமான நண்பர்களானோம்.
அப்போது அவர்புதியதொரு வீடு நாடகம் எழுதிகொண்டிருந்தார்.
அவர் கையெழுத்தில் அதனை நான் படித்துள்ளேன்.
வாசித்தும் காட்டுவார்.
சிறுநண்டு பாடல் அதில் ஒன்று.
அதனை படித்துவிட்டு அப்போதைய என் அறிவுக்குட்பட்டபடி
"இதில் எதிர்கால நம்பிக்கையில்லையே" என நான் கூற
உடனே அவ்விடத்திலேயே
"எறிகின்ற கடல் என்று மனிதர்கள் அஞ்சார் எது வந்ததெனில் என்ன அதைவென்று செல்வார்"
என எழுதிக் காட்டினார்.
அவரது எளிமையும்
,உண்மையும்
நேர்மையும்
கூர்ந்த அறிவும்
என்னை ஆட்கொண்டன.
அவர் ஒரு நடைமுறைச் சமதர்மவாதி.
அவருக்கு பங்களா கிடைத்த பிறகுதான்
பாண்டியன்(15)
இனியாள்(13),
சேரன்(11)
சோழன்(09)
ஔவை(5)
எனப் பெயரிய பிள்ளைகளுடன்
அவர் மனைவி பத்மாசினி அக்கா மட்டக்களப்பு வந்து சேர்ந்தார்.
அக்கா எனக்கு அக்காவானார்
பிள்ளைகள் எனக்கு மருமக்களானார்கள்.
குடும்ப உறவாக அவ்வுறவுகள் மலர்ந்தன
மகாகவி கொழும்பு செல்லும் வரை பெரும்பாலும் தினமும் அவருடனும் பிளைகளுடனும் நாள்கள் கழிந்தன.
நீண்ட ஆஜானுபாகுவான உருவம்.
அழகான கறுப்பு நிறம்
நிமிர்ந்து வேகமாக நடப்பார்
.நான் பின் தொடர்ந்து ஓடுவது போல நடப்பேன்.
கதைத்துக் கொண்டே நடந்து செல்வோம்
புத்திசாலித் தனம் மிகுந்த கிண்டலான பேச்சு
மெல்லிய நகைச்சுவை
இடைக்கிடை வெடிச் சிரிப்பு
அவரை நினைக்கையில் இவைதான் ஞாபகம் வருகின்றன
அப்போது மட்டக்களப்பு அரசாங்க அதிபராக இருந்தவர் தேவநேசன் நேசையா
மிக நேர்மையான லட்சியவாதி அவர்
இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள்.
மட்டக்களப்பு கூத்துக்களை வெளிக்கொணரும் முயற்சியில் பேராவித்தியானந்தன் ஈடுபட்ட காலம் அது.
அவருக்கு வலதுகரமாக விளங்கினார் அரச அதிபர் தேவநேசன்.
தேவநேசனுக்கு இவ்விடயத்தில் உற்ற துணையாக இருந்தார் மஹாகவி.
மட்டக்களப்புக் கச்சேரியால் ஆரம்பிக்கப்பட்ட கலாசாரப் பேரவையின் மிக முக்கிய பொறுப்பில் தேவநேசனுக்கு மஹாகவி உதவியாக இருந்த காலத்தில்தான்
மட்டக்களப்பில்அண்ணவிமார் மாநாடு நடைபெற்றது.
முதன் முதல் அரசால் அண்ணாவிமார் கௌரவிக்கப்பட்டனர்.
,இராமநாடகம்,அனுருத்ர நாடகம் போன்ற கூத்து நூற் பதிப்புகள் வெளி வந்தன.
பதிப்பாசிரியர் வீ.சீ.கந்தையா
பின் நின்று இயக்கியவர் வித்தியானந்தன்
அவரைக்குப் பக்க பலமாக நின்றவர் அரச அதிபர் தேவநேசன்
அவரைப் பின்நின்றியக்கியவர் மஹாகவி
கச்ச்சேரி அலுவலர்களுடன் கச்சேரி வேலை நேரங்களுக்குப் பின் மஹகவி உரையாடியதை நான் கண்டிலேன்
கச்சேரிக்கு உள்ளும் புறமும் எழுத்தாள நண்பர்களுடந்தான் அவர் பொழுது கழியும்
மஹாகவி எழுதிய கண்மணியாள் காதை வில்லுப்பாட்டு நிகழ்த்த பெரியதொரு வில்லுடனும் குழுவுடனும் முக்கியமாக தனது பிரதம சீடன் நாடக நடிகர் அப்துல் லத்தீபுடனும் லடிஸ் வீரமணி மட்டக்களப்பு வந்து மஹாகவி வீட்டில்தான் தங்கினார்.
வீடு ஒரே களேபரம்.
நாதஸ்வர் வித்துவான் பத்மனாதன் வந்து மகாகவியின் பங்களாவில்தான் நின்றார்.
மஹாகவி காலத்தில்தான்
தாஸீஸியஸ் தயாரித்த கோடை
,வி.வீ வைரமுத்துவின் பக்த நந்தனார்,
சரத்சந்திராவின் மனமே
,வித்தியானந்தனின் ராவணேசன்
என்பனவும்
மட்டக்களப்புக் கூத்துகளும்
கலாசாரப் பேரவை ஆதரவில் மட்டக்களப்பு மைதானத் திறந்த வெளி அரங்கில் மேடையேறின
தில்லானா மோஹனாம்பாள் படம் வந்த காலம் அது
நான் மஹாகவியுடன் பல தடவைகள் அப்படத்தை அன்றைய மட்டக்களப்பின் பட மாளிகையான இம்பீரியல் தியேட்டரில் பார்த்திருப்பேன்.
நீலாவணன் மகன் எழில் வேந்தனை நான் சிறு பையனாகக் கண்டதும் அவன் மாமா என என்னுடன் ஒட்டிக்கொண்டதும் மஹாகவியின் வீட்டில்தான்
பாண்டியனும் இனியாளும் யாழ்ப்பாணத்தில் படித்ததாக ஞாபகம்
அவர்கள் விடுமுறைக்கு மாத்திரமே வருவார்கள்
ஏனையவர்கள் மட்டக்களப்பு கல்லூரிகளில் கற்றனர்
ஔவை அப்போது ராங்கியும் பிடிவாதமும் மிக்க குழந்தையாக இருந்தாள். அவளுக்காக மஹாகவி ஒரு அபினயப் பாட்டு எழுதிப் பழக்கியும் இருந்தார்
சின்னக் குருவி அமர்கிறது
சிறகை மெல்ல அசைக்கிறது
சிறகை அசைத்துப் பறக்கிறது
என்ற அப்பாடலை எங்கள் முன் வந்து வணக்கம் சொல்லிப் பின் தன் சின்னஞ் சிறுகைகளையும் உடலையும் அசைத்து கண்களை உருட்டி அபினயத்தோடு அழ்காக அப்பாடலை ஔவை கூறுவதை அனைவரும் ரசிப்போம்
சேரனைப் படம் பார்க்க என்னுடன் மாத்திரமே மஹாகவி அனுப்புவார்
எனது சைக்கிள் முன் வாரில் அவனை ஏற்றிக்கொண்டு படத்துக்குக் கூட்டிச் செல்வேன்
தூண்டல் செய்து வாவிவியில் மீன் பிடிக்க சேரனுக்கும் எழில்வேந்தனுக்கும் உதவியமை ஞாபகம் வருகிறது
அப்போது அவர்களுக்கு 9 அல்லது 10 வயதிருக்கும்
நுஹ்மான்,நீலாவ்ணன்,பொன்னுத்துரை,அன்புமணி,பாக்கியனாயகம்,சில வேளைகளில் சண்முகம் சிவலிங்கம் முதலான எழுத்தாளர்கள் மஹாகவி வீடு வருவார்கள்
ஹாபீஸ் செய்யது அகமது என்றொரு இந்திய முஸ்லீம் மட்டக்களப்பு நகரில் கோழித்தீன் கடை வைத்திருந்தார்.
காங்கிரஸ்காரர்
.அவர் ராஜகோபலச்சாரியுடன் தமிழ் நாட்டில் இயங்கியவர்
அவரும் மஹாகவியும் நண்பர்கள்.
மஹாகவியினால் ஹாபீஸ் எனக்கும் நண்பரானார்
மஹாகவி தவறாது செல்லும் இடங்களில் இக்கோழித்தீன் கடையும் ஒன்று
மஹாகவியின் பிள்ளைகளுக்கு அவர் ஹாபீஸ் மாமா
நாங்களும் பின்னர் அவரைக் ஹாபீஸ் மாமா என அழைக்கலானோம்
மஹாகவிக்கும் அவர் ஹாபீஸ் மாமாதான்
அற்புதமான காலங்கள் அவை
இன்னும் பல நினைவுகனடி மனதில் உள்ளன.
ஞாபகத்துக்கு வருவதாயில்லை
மஹாகவியின் பொறுப்பில்தான்.மட்டக்களப்புக் கச்சேரியின் கீழ் வரும் வாடிவீடுகளின் நிர்வாகம் இருந்தது.
அவற்றை மேற்பார்வை பார்க்க மஹாகவி செல்கையில் அவருடன் என்னையும் கூட்டிச் செல்வார்.
இருவரும் மட்டக்களப்பின் பல கவி அரங்குகளுக்குச் சென்ற ஞாபகங்கள் வருகின்றன
கவிதை பற்றிய என் எண்ணங்கள் அவரால் மாற்றம் பெற்றன.
என் மனதில் மிகப் பதிந்த ஆளுமை அவர்.
அவரது புதியதொரு வீடு நாடகத்தைநண்பர் தாஸீஸியஸ் மேடையிட்டார்;
1971இல் மீண்டும் மேடையிட்டபோது மஹாகவி காலமாகியிருந்தார்
.அதில் நானும்,பத்தண்ணாவும்,முத்துலிங்கமும் காலம்சென்ற சுந்தரலிங்கம் ,இ.சிவானந்தன் ஆகியோரும் நடித்திருந்தோம்.
பின்னர் இந் நாடகத்தை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 1976இல் நான் நெற்யாள்கை செய்தேன்
அதில் சிதம்பரனாதன்,பாலசுகுமார் ஆகியோர் நடித்தனர்.
அன்று இந்நாடகம் யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் மேடையேறியது
1987இல் இதனை நானும் குழந்தை சண்முகலிங்கமும் நுண்கலைத் துறைக்காக யாழ்ப்பாணத்தில் நெறியாள்கை செய்தோம்.
கலாநிதி ஜெயசங்கருடன் கனடாவில் வசிக்கும் மாலினி லண்டன் குருபரனனாகியோரும் அதில் நடித்திருந்தார்கள்.
1994இல் கிழ்க்குப் பல்கலைக் கழகம் வந்தபோது இதனை நான் கிழ்க்குப் பல்கலைக் கழக நுண்கலைத் துறைக்காக நெறியாள்கை செய்தேன் அதில் பாலசுகுமார் நடித்திருந்தார்
இவற்றைக் காண மஹாகவி இல்லாமை என்னை மிகவும் வருத்தத்திற்குள்ளாக்கியது
யாழ்ப்பாணத்தில் இவற்றைஅக்காவும் அவர் பிள்ளைகளும் பார்த்தார்கள்
இவ்வாண்டு புதியதொரு வீட்டை அரங்க ஆய்வுகூடத்திற்காக
மீண்டும் தயாரிக்கிறேன்
என்றும் பொருந்திவரும் இனிய நாடகம் அது
அவரது மட்டக்களப்பு வாழ்வு பற்றி எழுத நிறைய உள்ளன
அவரோடு பழ்கிய பலர் காலமாகிவிட்டார்கள்.
மிகச்சிலரே உயிரோடுஇருக்கிறார்கள்.
அவர்களோடு உரையாடினால் மறைந்து கிடக்கும்
ஞாபகங்கள் உயிர் பெறக்கூடும்
முயன்று பார்ப்போம்

மௌனகுரு