தாய், தந்தை, பாட்டன் , பாட்டி, பூட்டன், பூட்டி, இவற்றைத்தவிர நம் எத்தனை பெர்களுக்குத்தேரியும் இவற்றைவிட முன்னோர்களையும் நாம் பெயர்சொல்லி அழைத்திருக்கின்றோம் என்று. அன்றைய எம் முன்னோர்களின் வாழ்க்கை முறையும் கலாசார விளுமியங்களுடனான பழக்கவழக்கமும் இருந்ததன் காரணமாகவே அவர்களின் ஆயுள் அதிகமாகவும் சுகமாகவும் இருந்தது. இதனாலேயே அவர்களை முறைசொல்லி அழைக்க வேண்டிய தேவை இருந்திருக்கிறது. இன்றைய எமது சமூகத்தினர் முறை சொல்லி அழைக்கும் பழக்கத்திலிருந்து மெல்ல மெல்ல மருவிவருவதைக் காணமுடிகிறது.
