கவிஞர்.மூனாகானா

இயற்பெயர்           : முருகப்பன் கணபதிப்பிள்ளை
முகவரி                   : வேளாளர் வீதி, ஆரையம்பதி, மட்டக்களப்பு
பிறப்பு                      : 22.01.1924
பெற்றோர்              :  முருகப்பன் தங்கம்மா
மனைவி                 : சின்னப்பிள்ளை
கலை இலக்கியப் பணிகள் : 1945 முதல் இன்றுவரை கவிதை கட்டுரை நாடகம் வில்லுப்பாட்டு சொற்பொழிவு, கூத்து , கருத்தரங்கு , கவியரங்கு.
முக்கிய ஆக்கங்கள் : புழுகுப்புராணம் , கலாகோலம் தொடர்கவிதைகள், (தினகரன் 1947) லெட்சுமி கல்யாணம் (கூத்து) , பரிசாரி மகன் (கூத்து) , சூறாவளிக்கூத்து (கூத்து)
பெற்ற பரிசுகள் : ரீ.பா. நினைவுக் கவிதைப் போட்டி (முதற்கரிசு)
புலவர்மணி நினைவுக் கவிதைப் போட்டி (2 தடவைகள் முதற்பரிசு)
நூல்கள் : இலக்கிய நெஞ்சம் , கவிதை நெஞ்சம், (மூனாக் கானா வளர்த்த கூத்துக்கலை (.தா.செல்வராச கோபால்கனடா றிப்லக்ஸ் பதிப்பகம்)
சாதனைகள்: 1947 இல் மட்- ஆசிரியர் கலாசாலை மாணவர்களைக் கொண்டுலெச்சுமி கல்யாணம்என்ற பெயரில் முதன் முதல் ஒரு சமூகக் கதையைக் கூத்தாகத் தயாரித்து அரங்கேற்றினார். இக் கூத்துப் பின்னர் கொழும்பிலும் பிற கூர்களிலும் பல தடவைகள் அரங்பேறியது. வானொலியிலும் ஒலிபரப்பானது.
ஆய்வுப்பணி: கூத்துப் பாடல்கள் தொடர்பாக ஆய்வு செய்து பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் மூலம் பேராசிரியர்      சி.மெளனகுருவின் போற்றுதலுக்கும் ஆளாகினார்.
பெற்ற கெளரவங்கள் :
1. கலைமணி (மட்-கலாசாரப் பேரவை-1989)
2. கலாபூஷணம் (கலாசார அமைச்சு1995)
3. மக்கள் கவிமணி (மட்- ஆசிரியர் கலாசாரலை பொன்விழா -1996)
4.கலையரசு (வலயக் கல்வி பண்பாட்டலுவல்கள் பிரிவு – 2000)
5.தலைக்கோல் விருது (கிழக்குப் பல்கலைக் கழகம் -2001)