கவிஞர்.கா.சிவலிங்கம்

முழுப் பெயர் :கார்த்திகேசு சிவலிங்கம்
பிறந்த இடம்  : பாலமீன்மடு
பிறந்த திகதி : 31.08.1943
கல்வித் தகைமை : சிரேஸ்ட பாடசாலைத் தராதரப் பத்திரம்
தொழிற் தகைமை : இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவனத்தின்     ‘லைசென்ஸியேற்’ தரம் -
தொழில் : வாழைச்சேனைக் காகித ஆலையின் கணக்காளராகக் கடமையாற்றி 60 வது வயதில் ஓய்வு பெற்றவர்.
15 வது வயதில் இருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டது. 1962ம் ஆண்டு தனது 19 வது வயதில் சிவானந்த வித்தியாலயத்தில் மாணவனாக இருந்த போது இங்கு நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் 3ம் இடத்தைப் பிடித்து பரிசு பெற்றார். ஆரம்பத்தில் எழுதிய கவிதைகள் எதுவும் அவர் வசம் இல்லாதது துரதிஸ்டமே. சேவையில் இருந்து ஓய்வு பெற்றபின்புதான் கவிதைத்துறையில் முழுமையாக ஈடுபட அவகாசம் ஏற்பட்டது. இவரது கவிதைகள் தினகரன், வீரகேசரி, தினமுரசு, சுடர் ஒளி, மெட்ரோ நியூஸ், ஈழநாதம் முதலிய நாளேடுகளிலும் ‘கிழக்கொளி’ (கிழக்குப் பல்களைக்கழக வெளியீடு), சுவைத்திரள், செங்கதிர், இருக்கிறம், ஜீவநதி, தேனகம் (மண்முனை வடக்குக் கலாசாரப் பேரவை        வெளியீடு) முதலிய சஞ்சிகைகளிலும் அவ்வப்போது வெளிவந்தன.
அவற்றைத் தவிர களுதாவளைப் பிள்ளையார் ஆலய நிர்வாக சபையினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இறுவட்டாக களுதாவளைப் பிள்ளையார் மேல் சில பக்திப் பாடல்களும் எழுதிக் கொடுத்துள்ளார். இவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு ‘முகம் காட்டும் முழு நிலா’ என்ற கவிதை நூலாக 06.04.2007 இல்     மணிமேகலை பிரசுரத்தாரால் கொழும்பு தமிழ் சங்கத்திலும் 21.04.2007 இல் மட்ஃமகாஜனக் கல்லூரியிலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
பெற்ற கௌரவங்கள்
1.’முகம் காட்டும் முழு நிலா’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் (21.04.2007) சிறந்த கவிஞர் என்று பாராட்டி பாலமீன்மடு ஸ்ரீ சித்தி விநாயகர் கலாமன்றத்தினராலும் காகித ஆலை முன்னாள் ஊழியர் சங்கத்தினாலும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி.த.தங்கேஸ்வரி அவர்களின் சார்பில் அவரது செயலாளர் திரு . அன்புமணி ஐயா அவர்களாலும் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
1.கவிதைத் துறைக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி மண்முனை வடக்குப் பிரதேச செயலக கலாசாரப் பேரவையால் 30.08.2008 இல் முத்தமிழ் விழாவின் போது பொன்னாடை போர்த்தியும் விருது, சான்றிதழ் என்பன வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
1.இலக்கியம், நாடகம் ஆகிய துறைகளுக்கு ஆற்றிய மிகச்சிறந்த சேவைக்கான உபகாரமாக 15.12.2009 ல் இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் விருதும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
1.05.08.2009 அன்று ‘சடையப்பர் சுவாமிகளும் திராய்மடு திருத்தலமும் நூல் வெளியீடடின் போது திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபையினரால் பொன்னாடை போர்த்தி வாழ்த்து மடல் வழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.