கொக்கட்டிச்சோலை அருள்மிகு தான்தோன்றீசுவரர் ஆலய தேரோட்டம் - 15.09.2019

கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் முக்கியமான நிகழ்வாக இங்கு இடம்பெறுகிறது. திருவிழாக்கள் முடிவில் தேரோட்ட நிகழ்வு இடம்­பெறும். கலிங்க மாகோன் காலமிருந்து தேரோட்ட நிகழ்வு நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தருமசிங்கன் எனும் மட்டக்களப்பு மன்னன் சோழ சிப்பிகளை தருவித்து மூன்று தேர்கள் செய்ததாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. ஆனால் இங்கு நடைபெறும் தேரோட்ட நிகழ்வானது ஒரிசா பூரி ஜகந்தாதர் கோயில் தேரோட்ட முறைப்படியே அமைந்துள்ளது. 

கலிங்க மன்னன் அனந்தவர்மன் சோடகங்கள் காலத்தே ஜகந்-நாதர் ஆலய தேரோட்டம் தொடங்கியது. கலிங்க மாகோனும் அனந்தவர் மனும் சம காலத்து கலிங்க மன்னர்கள், ஜகந்­நாதர் ஆலயத்திலேயே பலராமன், ஜகந்­நாதர், சுபத்திரை தேர்களும் இங்கு சித்திரத்தேர் (சிவனுக்குரியது) பிள்ளையார் தேர் (முருகன், பிள்ளையார்) அமைந்துள்ளது. இவர்கள் இத் தேர்களில் உலாவருவர். இங்கும் மூன்று தேர்கள் இருந்தன என்பதும் குற்றம் பொறுக்காமல் ஒரு தேர் ஆற்றில் மூழ்கியது என்பதும் மக்களிடையே நிலவும் கதையாகும். 

கால் புதையும் மணலிலே இத் தேர்கள் ஓடுவதே ஓர் அபூர்வமாகும்.