கூத்தரங்கு கொண்டாடி மகிழ வைப்பதனூடாகவும் செயற்பாட்டினூடாகவும் மனிதரை இணைக்கும் சாதனம். இதன் ஆற்றுகை அழகியல் சமுதாயம் ஒன்று கூடி செய்து விழா எடுப்பதாகும். இதன் வெளி கற்பதற்கான சூழலைத் தருவது. கூத்தரங்கானது ஒரு சமூகம் சுயமாக ஒன்று கூடி திட்டமிட்டு முகாமை செய்து செயற்பட்டு பின் தானே மதிப்பீடு செய்து அரங்கேற்றுவதாக அமையும். இதில், சிறுவர்கள் பெண்கள், இளைஞர்கள், யுவதிகள், வயது முதிர்ந்தோர் எனப் பலரும் இணைந்து செயற்படுவர். இதன் கொண்டாடுதல் அதற்கான தயாரிப்புக் காலத்திலேயே தொடங்கி விடும். இது சமூகத்தை ஒன்று கூட்டி இயங்க வைக்கும் அற்புத சாதனம். இன்றுவரையும் பரவலாக பல ஊர்களிலும் ஆடப்பட்டு வருகின்றது. 21ம் நூற்றாண்டில் நுகர்வுப் பண்பாட்டில் தத்தளித்துக் கொண்டிருப்போரையும் தனி மனிதராக்கப்பட்டுள்ளோரையும் உயிர்க்க வைக்கும் தன்மை இதில் உண்டு என்பதால் இதன் அவசியம் சமகாலத்தில் உணரப்பட்டுள்ளது. சமூகம் ஒன்று கூடி விழா எடுக்கும் வெளியை இது கொடுக்கின்றது. கூத்தர்கள் தமது ஆற்றல், திறனைக் கொண்டாடுவதும் அண்ணாவிமார் தமதுநிபுணத்துவங்களை வெளிப்படுத்துவதும் இங்கு முக்கியமானது.
கூத்துப் பயில்வு வௌ;வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை மையப்படுத்தி ஆராய்ச்சிகளும் சரியாக நடைபெறுகின்றது. கூத்தின் ஆற்றுகை அழகியலை நவீனத்துவக் கலைப் பார்வையுடன் கட்டமைத்தற்கு அப்பாலே பார்க்க வேண்டும் என்பது ஆராய்ச்சிகளில் வலுப்படுத்தப்படுகின்றது.
காலனிய ஆதிக்கமும் நவீன அறிவும் மட்டும் கொண்டுவந்ததல்ல அரங்கு அதற்கு முன்னரே எங்களிடம் மிகத் தரமான அரங்கு உண்டு என்பதை கூத்து காட்டுகின்றது. பல்கலைக்கழகம், பாடசாலைகளில் கூத்து அதற்கேற்ப கற்பிக்கப்படுகின்றது. பல இளைஞர்கள் யுவதிகள், சிறுவர்கள், சிறுமியர், பெரியோர், உத்தியோகஸ்த்தர் எனப் பலரும் இதில் ஆடுகின்றனர். அதில் ஒரு கிராமமே வாகரையாகும். இங்கு கூத்து செழிப்பாகவும் செம்மையாகவும் அழகாகவும் பயில்வில் இருக்கின்றது. பல்வேறு அண்ணாவிமார் உருவாகி கூத்தை தமது உயிருடன் வைத்திருத்தார்கள்.
இங்கு அம்பந்தனாவெளி, ஊரியங்கட்டு, பால்சேனை போன்ற கிராமங்களில் இளம் அண்ணாவிமாரால் கூத்து தமது சமூகம் சார்ந்து முன்னெடுக்கின்றது. அசாதாரண நிலைமைகளால் விடுப்படிருந்த ஊர்களில் மீளவும் ஆடப்படுகின்றது. ஊர்களில் கூத்து மீள ஆடி வலுப்படுத்துவதற்கான உந்து சக்தி அளிக்கப்படுகின்றது. இதற்கு உதவும் பொருட்டே இக்கூத்து தொடங்குவதற்கான ஆலோசனை வழங்கி, முன்னீடு முகாமைக்கு உறுதுணையாக நின்றதோடு, அதற்கான உடுப்புக் கட்டுவதற்கான பண உதவியனைக் கொடுத்து அதன் சூழலில் செயற்பட்டவர் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் விரிவுரையாளர் திரு சு.சந்திரகுமார் ஆவார்.
இன்று அரங்கேற்றப்படும் ஏழாம்போர் வடமோடிக் கூத்தில் இளைஞர்கள், முதியோர், சிறுவர்கள் எனப் பலர் கலந்துகொண்டு ஆடுகின்றனர். அதற்கு உறுதுணை அவர்களது குடும்பத்தினரே ஆவர். இக் கூத்தின் அண்ணாவியார் இளையதம்பி நற்குணம் அவர்கள். அண்ணாவிமார்களான தனது தந்தை க.இளையதம்பி, செ.கணபதிப்பிள்ளை, செ.தம்பிப்பிள்ளை ஆகியோரிடம் கூத்தைப் பயின்றதாகக் கூறுகின்றார். இவர் கூத்தை மிகவும் விருப்புடன் முன்னெடுக்கும் இளம் அண்ணாவி. எதிர்காலத்தில் இக்கூத்தில் ஆடும் தனது மகனை அண்ணாவியாக்க வேண்டும் எனும் பெரு விருப்புடன் செயற்படுகின்றார்.
இவர் நான்கு கூத்துக்களைப் பழக்கியுள்ளார். க.இளையதம்பி (தந்தையின்) அண்ணாவியாரின் வேண்டு கோளுக்கிணங்க 2007 இல் தனியாக நின்று கூத்தை முதன் முதல் பழக்கி அண்ணாவியானார். இதற்கான காரணம் முக்கியமானது. 2007 இல் இப்பிரதேசத்தில் யுத்தம் நடந்து கொண்டிருந்ந காலம். பலர் தமது உறவை இழந்து உடமைகளை இழந்து சொந்த மண்ணில் இருந்து வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து மீள வந்த காலம். உடல், உள ரீதியாகப் பாத்திக்கப்பட்டு நொந்து சொல்லோன்னா வேதனையில் வாடிய காலம். இக்காலத்தில் கூத்து ஆடப்பட்டது. அச்சமூகமே சுயமாக முடிவெடுத்து கூத்தை ஆடியது. யுத்தத்தால் சிதைவடைந்திருந்து சிதறிக்கிடந்த சொந்தங்களையும் ஊர் மக்களையும் இணைத்து ஊரில் செல்வாக்கை ஏற்படுத்தவும் வயதுபோன அப்பா தனது கண்ணுக்குமுன் கூத்துப் போடவேண்டும் என ஆசைப்பட்டதனாலும் யுத்தால் பிரித்தவர்களை ஒன்று கூட்டவும் கூத்து ஆடப்பட்டதாக அண்ணாவியார் இ.நற்குணம் கூறினார். ஒரு சமூகம் தம்மை மீளத் தகவமைத்துக் கொள்ளவும் சமூக ஆற்றுப்படுத்தலை தாமே செய்யவும் கூத்தைக் கையாட்டமை முக்கிய பதிவாகும். இந்தக் கூத்தைப் பார்ப்பதற்கு பஸ் வண்டியில் தமது உறவினர்கள் பலர் கறுப்பளை, முத்துக்கல், தீவுச்சேனை, வம்மிவட்டவான் போன்ற ஊர்களில் இருந்து வந்து பார்த்து மகிழ்ந்தார்கள் எனவும் கூறப்பட்டது. அதன் பின்னர் இவரால் 2010 இல் கற்பலங்காரி வடமோடிக் கூத்தும், 2012 இல் கன்னன் சண்டை வடமோடிக் கூத்தும் பழக்கி ஊர் கூடி அரங்கேற்றப்பட்டது. அடுத்த கூத்து இன்று 13.07.2016 அரங்கேற்றப்படும் எழாம்போர் ஆகும்.
வாகரையில் சமகாலத்தில் கூத்துப் பழக்கும் அண்ணாவி மார்களாக, பொன்னையா, க. செல்லதம்பி, க. வல்லிபுரம், பொ. அருமைநாயகம் போன்றோர் செற்படுகின்றனர்.
ஏழாம்போர் வடமோடிக் கூத்தில் 28பேர் ஆடுகின்றனர். இதில், இளைஞர்கள் பலர் விருப்புடன் சிறப்பாகக் கலந்து கொண்டு தமது திறமை ஆற்றல்களை வெளிப்படுத்துகின்றனர். இது இவர்கள் ஒன்றுகூடும் வெளியாகவும் உள்ளது. முன்னீடும் முகாமையும் ப.கமலேஸ்வரனும் அதற்கு உதவியாக அ.அருமைநாயகம், சு.சந்திரகுமார் (விரிவுரையாளர், நுண்கலைத்துறை, கி.ப.க) அவர்களும் செயற்படுகின்றனர்.
திரு. சு.சந்திரகுமார், விரிவுரையாளர், நுண்கலைத்துறை, கிழக்குப்பல்கலைக்கழகம்.
இதில் பங்குகொள்ளும் கூத்தர்கள்
அண்ணாவியார் - இளையதம்பி நற்குணம்
கொப்பியாசிரியர் - வி.பிறேமகாந்தன்
கட்டியக்காரன் - ப.விதுர்சன்
துரியோதனன் - எம். ரசிகாந்தன்
துட்சாதனன் - கே.தினேஸ்
கர்ணன் - எல். கஐpத்
சகுனி – எம். விஐயகுமார்
துரோணர் - பி.பிரேமகாந்தன்
விகர்ணன் - ஆர்.சுரேந்திரராஜா
பீஸ்மர் - தி.சுதானந்தன்
சல்லியன் - ப.செல்வராஜா
பெருந்தெருவாள் -ஜெ.அனோஜன்
தோழி – 1 - சு.நிறோஜன்
தோழி – 2 – ப.மிதுர்சன்
பகதத்தன் - லி.கஜித்
அஸ்வத்தாமன் - ப.லவிக்குமார்
கிருவாச்சாரி – க.தினேஸ்
சிறுதாவி – தி. பிறேமகாந்
தர்மர் - இ.அழகேந்திரன்
வீமன் - ப.ரகுனேஸ்வரன்
அருச்சுனன் -சி.ரன்ஜன்
நகுலன் - ந.விஜயராஜ்
சகாதேவன் -சி.குமார்
துரோபதை – ச.சுதாகரன்
கிருஸ்ணர் - ப.கமலேஸ்வரன்
துட்டத்தீமன் - தி.லக்சகாந்தன்
அபிமன்னன் -ந.விஜயராஜ்
சிகண்டி –தி.லக்சகாந்தன்
கடோற்கஜன் - செ.காசுபதி
விராடன் - ம.விஜயகுமார்
இடம் - காளிகோயில் வீதி, அம்பந்தனாவெளி
காலம் - 13.07.2016
நேரம் - மாலை 6.00 – காலை 6.00
அண்ணாவியார் - இளையதம்பி நற்குணம்