எமது முன்னோர்கள் தமது வேலைகளை இலகுவாக்கிக் கொள்வதற்காக கையாண்ட முறைகளில் ஒன்றே "திருகல்" ஆகும். குரக்கன்,உழுந்து,பயறு,அரிசி,சேழன்,போன்ற இன்னோரன்ன தானியங்களை அரைப்பதற்கு பயன்படுத்தப் படுகின்றது. கருங்கல்லினால் நன்கு பொழிந்து, தானியங்களை அரைக்கத்தக்க வகையிலும், பிடித்து சுற்றும் வகையில் கைபிடி வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும். இருந்த இடத்திலிருந்து இலகுவாக அரைக்கத்தக்க வகையில் தொழிநுட்ப்ப உத்திகளை கையாண்டிருப்பது வியப்பினை ஏற்படுத்துகின்றது. இன்று இவற்றிற்கு பதிலாக இயத்திரனியல் இயந்திரங்களின் வருகையினால் இவற்றின் தேவை குறைவடைந்து செல்கின்றன.இதனால் எமது முன்னோர்களின் பொறிமுறை உத்திகள் கேட்ப்பாரற்று நூதனசாலைகளிளும், வீட்டு மூலைகளிலும் அநாதரவாகக் கிடக்கின்றன.
- வன்னியசிங்கம் வினோதன்-