அம்மானைக்காய்

அம்மனைக்காய் என்பது பழந்தமிழ் மகளீர் விளையாடும் ஒரு விளையாட்டுப் பொருள் ஆகும். ஆண்கள் விளையாடுவதற்குப் பந்து பயன்படுவதைப்போல் பெண்கள் விளையாட இவ் அம்மானைக்காயைப் பயன்படுத்தினர். சிலபதிகரத்தில் கண்ணகி இவ் அம்மனைக்காயால் விளையாடுவது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இதன்காரணமாக இன்றும் அனேக கண்ணகி அம்மன் ஆலயங்களில் இவ் அம்மனைக்காயைக் காணலாம். அங்கு இது ஒரு புனிதத் தன்மைகொண்ட சடங்குப் பொருளாகக் காணப்படுகின்றது. இதனுள் மணிகள் காணப்படும் அதிலிருந்து ஒருவித ஒலியும் உண்டாக்கப் படுகின்றது. 
     மேலும், இவ் அம்மானைக்காய் விளையாட்டுப் பற்றி திருவாசகத்தில் திருவம்மானை எனும் பகுதியில்  

"....... அம்கணன் அந்தணன் ஆய் அறைகூவி வீடு அருளும் 
          அம்கருணை வார்கழலே பாடுதும்காண் அம்மானாய்"

பொருள் : ..... ஞானக் கண்ணுடைய அந்தணன் அவன். அறிய கருணையுடைய அவன் என்னை வழியக் கூவியழைத்து வீடு பேறு அளித்தருளினன். அவனைக் குறித்து நாம் பாடி அம்மானை விளையாடுவோமாக. ....

என சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 - மதன் -
அம்மானைக்காய்