காவடிப்பாடல்கள் கிழக்கிலங்கையின் ஒரு தனித்துவம் வாய்ந்தவை என்றும் கூறலாம் இதிலே "கழுகுமலை தனிலுறையும் முருக வேளே ...." எனத் தொடங்கும் கழுகுமலைப் பத்துப் பாடல்கள் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை. இருப்பினும் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் மாறுபட்ட தனித்துவமான காவடிப்படல்களும் உருவாக்கம் பெற்றுள்ளன. காவடிப் பாடல்கள் ஒருவர் காவடி எடுத்து வரும் வழியில் நடையாக பாடப்படுபவை. அவற்றுக்கென ஒரு தனித்துவமான மெட்டுக்களும் உள. அம் மெட்டுக்கள் ஒருவரை பக்திகொள்ளச் செய்பவையாக அமைந்து காணப்படும். இதனைக் கிராமங்களில் "உரு" எனும் சொல்லால் அழைப்பார்கள். இக் காவடிப்பாடல் களைக் கேட்டாலே உருவேறும் தன்மை கொண்டவையாக இந்தக் காவடிப்பாடல்களின் இசையும் பொருளும் அமைந்து காணப்படும்.
கீழே குறிப்பிடப் படும் பாடல் புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயம் மீது திரு.வே.தட்சணாமூர்த்தி அவர்களினால் பாடப்பட்டு திரு.செ.தேவதாஸ் அவர்களின் குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
- மதன்-
- மதன்-