குரங்கு கொடி போட்ட மலை

இம் மலை இராமாயணக் காலத்தில் இராமர் இலங்கையை வென்றதன் பின்னர் அனுமரைக் கொண்டு தனது வெற்றிக் கொடியை இம் மலையில் ஏற்றியதாக இப் பிரதேச மக்களால் நம்பப்படுகின்றது. இம்மலையில் வாலி நீதி பேசியதாகவும் வும் இன்னுமொரு கதை உள்ளது. இதற்கான ஆதாரங்களாக இம் மலையில் கல்லாலான கதிரை மற்றும் மேசை என்பன காணப்பட்டதாகவும் ஊரவர்கள் குறிப்பிட்டனர். அனுமரையே குரங்கு என இப்பிரதேச மக்களால் கூறப்படுகிறது. இதனாலேயே இம் மலை குரங்கு கொடி போட்ட மலை என அழைக்கப்படுகிறது. கேட்பதற்கே மிகவும் சுவாரஸ்யமாகவும் ஆவலாகவும் இருந்த எமக்கு அவ்விடம் பெரிய ஏமாற்றத்தையே தந்தது. காரணம் மக்கள் குறிப்பிட்ட அந்த இடத்தில் அவ்வாறான எந்தவித மலையையும் எம்மால் காணமுடியவில்லை. பின்னர் எங்களை அழைத்துச் சென்றவரிடம் விசரித்தபோது அருகாமையில் காணப்படும் வீதியைக் காட்டி அதற்கான ஆரம்ப வேலைகளுக்கான கல்லை இம்மலையில் இருந்தே பெற்றதாகக் குறிப்பிட்டார்.  


 மட்டக்களப்பு இலிருந்து Kathiraveli வரை