சீர்தங்கு நிறைமங்கை அருள்மங்கை மறைமங்கை
செகமங்கை புகழ்மங்கை சேரவேயுறையும்
கார்தங்கு கங்கைதிகழ் கைதை நகருறைகின்ற
கண்ணகை தன்மீது தமிழ்க் காவியம்பாட
கூர்தங்கு மொருகோடு மிருசெவியும் நல்வாயும்
குடவயிறும் நுதல்விளியும் உடையமார்பழகும்
ஏர்தங்குமடியவரை ஈடேற்றுமைந்துகர
இருகமலம் என் நெஞ்சில் என்றுமயரேனே
என்றுமுயர் அண்டர்புகழ் கண்டு கயிலாயமதில்
இன்பமுடனே அருள்சுரக்க நினைவாகி
பண்டுபோலேன்ஞ முலகுய்யவரு கின்றவிரு
பாதமகலாம லரனாரிடமிருந்து
வென்றுலகை அரசு புரிபாண்டியன் தவத்தால்
வெட்கினேன் எனது குறை விடையருழுமென்ன
முண்டக மலர்த்தகுழல் மதியழகினானே
மொய்குழலே எனது முனியகல முறைசெய்யே
செய்ய மாவின் கனிதாய் உதித்தாயே
செப்பரிய வணிகர் மகளாக வந்தாயே
உய்யவே பூலோகமருள் புரிந்தாயே
ஒதரிய கோவலன் தனையுகந்தாயே
செய்யபுகழ் மாறனிட விளிமறைத்தாயே
சென்று மதுராபுரியை நீயெரித்தாயே
தையலே கைதை நகர் தழையவந்தாயே
சத்தியே சித்தியே தாயான அம்மையே
அம்மா எனக்கினிய அம்மா என்னம்மா
அரலோக பரலோக ஆதி நீயம்மா
கம்மாளனைப் பழி விளைத்தது நீஅம்மா
கனலிட்டு மதுரையை எரித்தது நீயம்மா
வெம்மைதரும் அக்கினி தனித்தது நீயம்மா
வேந்தனிட மார்புருக விட்டது நீயம்மா
மும்மாரி பொழியவரு கைதை நகருறைகின்ற
முத்து விளையாடலை அகற்றியருள்தாயே
தாயே இவ்வுலகிலுள்ளோர் செய்பிழைகளாலோ
தான்தோன்றுமப்பர் தன்குறைகள் தன்னாலோ
காவேரி கடவுள் அயன் மாலருளினாலோ
கதிரைநகர் முருகரிட கட்டளைகளாலோ
பேய்களுடனாடு வைரவர் கொடுமையாலோ
பெலவீரர் முக்கோடி தேவர் பகையாலோ
மாயமாய் வந்திடும் துயர்குறைகளாலோ
மண்முனைப்பதி தழைய வந்த கண்ணகையே
கண்ணாயிரம் பெற்ற அரசர் குறைதானோ
கயிலை உமைகாளி நவசத்தி குறைதானோ
பண்ணாயிரம் பெற்ற வாணி குறைதானோ
பலகலை தெரிந்த பல முனிவர் குறைதானோ
எண்ணாயிரம் சத்தி பூமாது நாமாது
எவர்கள் குறையானாலும் நியதனை மாற்ற
வண்ணோர்கள் புகலவரு கைதை நகருறைந்த
வேத வேதாந்த வினை தீர அருள்மாதே
வினைகளது முடுகுமோ பிணிதுயர்கள் முடுகுமோ
வேறுமொரு துட்டப்பசாசுகள் அணுகுமோ
கனவிலும் முடுகுமோ வேறு சஞ்சல நோய்கள்
கயரோக முதலான பலபிணிகள் முடுகுமோ
திகையனவிலாயினும் உனை நம்மினோர்கும்
திகழ்முத்து விளையாடல் தேசத்தில் வருமோ
வனையகுழல் அழகுகுல வனிதையே தைகைநகர்
வாழ்கின்ற கண்ணகைத் தாயை முறையிடவே
முறையான செல்வி உனக்கோல மேலாம்
மோகனக்குயிலே உனக்கோல மோலம்
மறைவாணர் குயிலே உனக்கோல மோலம்
மாநாகர் புதல்வி உனக்கோல மோலம்
குறையாத கொம்பே உனக்கோல மோலம்
கோபலன் பாரி உனக்கோல மோலம்
கறைமிடற்றரனுதவு கைதை நகருறைகின்ற
கண்ணகைத்தாயே உனக்கோலமம்மா
அம்மா நீ மாறன்விளி மாற்றினது பொய்யோ
அத்தனருளாலுலகில் உற்றது நீபொய்யோ
கம்மாளனைப் பழிவிழைத்தது நீபொய்யோ
கனலிட்டு மதுரையை எரித்தது நீபொய்யோ
வெம்மைதரும் அக்கினி தணித்தது நீபொய்யோ
வேந்தனிட மார்புருக விட்டது நீபொய்யோ
செம்மையுறு கைதைநகர் காத்தது நீபொய்யோ
தேவியே நின்னருளுகிப்ப பொய்யோ
பொய்யனவே சமயங்கள் வரமுறையே முறையோ
புதிய பலதுயர்கள்வர முறையோ முறையோ
செய்ய கோதாரிவர முறையோ முறையோ
செய்யவைசூரிவர முறையோ முறையோ
பொய்களவு கொலைகள் வரமுறையோ முறையோ
புகலரிய பிணிகள் வரமுறையோ முறையோ
வையமது உய்யாதிருப்பதும் முறையோ
மாரிடர்கள் கலங்குவதும் முறையோ சொல்லம்மா
சொல்லரிய ஒங்காரமானாய் நமோநம
துய்யதோர் நவகோண முற்றாய் நமோநம
வல்லதொரு றீங்காரமானாய் நாமோநாம
வணிகர்குல மானாகர் மக--ள நமோநம
நல்லதொரு திதம்பர முகந்தாய் நமோநம
நாரி கெவுமாரி திரிசு--லி நமோநம
தில்லை நடமாடு சிவகாமி நமோநம
தேவியே கைதைநகர் வாழ்வு சவுந்தரியே
சவுந்தரி துரந்தரி மாதங்கி நீயம்மா
சஞ்சலமகற்றவர நாளில்லையோ அம்மா
வரந்தர உனக்கு மனமில்லையோ அம்மா
மானியர் செய்பிழை பொறுத்தருள் நீயம்மா
துரந்தரி உன்மக்கள் மனை காத்தருள் நீயம்மா
சூட்சாதி சூட்சமுறு சுந்தரி நீயம்மா
செகந்தழைய உன்மனமிரங்கி யாருளம்மா
தேவியே கைதைநகர் வாழுமம்பிகையே
வாழ்கின்ற கைதைநகர் மானிடர்க்காகவும்
மன்றாடி உனது மலர் பணிவதற்காகவும்
ஆழ்கின்ற தான்தோன்று அப்பருக்காகவும்
ஐங்கரன் மாலயன் அறுமுகற்காகவும்
நீழ்கின்ற உனதுபுகழ் பாடினோர்க்காகவும்
நின்னுடைய கட்டாடி மார்களுக்காகவும்
சூழ்கின்ற கைதைநகர் வைசூரி மாற்றுவாய்
துரைராசர் தொழவந்த துய்ய கண்ணகையோ
கண்ணகைத்தாயே உனக்கு மங்களமே
கஞ்சமலர்மாதே உனக்கு மங்களமே
அண்ணல் மாதங்கையே உனக்கு மங்களமே
அகில புவனங்கள் பெருக மங்களமே
வண்ணமுறு தாயே உனக்கு மங்களமே
மானாகர் புதல்வியே உனக்கு மங்களமே
திண்ணமிகு கைதைநகர் தழைய மங்களமே
செல்வி நுாபுரபதம் வாழ்க மங்களமே
மங்கையுமை பூமாதும் நாமாதும் வாழி
மற்றுமுள நவகோண சத்திகளும் வாழி
திங்களணி ஈசர் திருமாலயனும் வாழி
திகழ்கதிரை முருகரிட செய்யபதம் வாழி
வங்கமுறு வணிகர் வேளாளரும்வாழி
வரிசைபெறு குகன் மரபுள்ளோர்களும் வாழி
கங்கைதிகழ் மண்முனைக் கண்ணகைத்தாயார்
கமல பொற்பாதம் மிகவாழ்க வழியதே
செகமங்கை புகழ்மங்கை சேரவேயுறையும்
கார்தங்கு கங்கைதிகழ் கைதை நகருறைகின்ற
கண்ணகை தன்மீது தமிழ்க் காவியம்பாட
கூர்தங்கு மொருகோடு மிருசெவியும் நல்வாயும்
குடவயிறும் நுதல்விளியும் உடையமார்பழகும்
ஏர்தங்குமடியவரை ஈடேற்றுமைந்துகர
இருகமலம் என் நெஞ்சில் என்றுமயரேனே
என்றுமுயர் அண்டர்புகழ் கண்டு கயிலாயமதில்
இன்பமுடனே அருள்சுரக்க நினைவாகி
பண்டுபோலேன்ஞ முலகுய்யவரு கின்றவிரு
பாதமகலாம லரனாரிடமிருந்து
வென்றுலகை அரசு புரிபாண்டியன் தவத்தால்
வெட்கினேன் எனது குறை விடையருழுமென்ன
முண்டக மலர்த்தகுழல் மதியழகினானே
மொய்குழலே எனது முனியகல முறைசெய்யே
செய்ய மாவின் கனிதாய் உதித்தாயே
செப்பரிய வணிகர் மகளாக வந்தாயே
உய்யவே பூலோகமருள் புரிந்தாயே
ஒதரிய கோவலன் தனையுகந்தாயே
செய்யபுகழ் மாறனிட விளிமறைத்தாயே
சென்று மதுராபுரியை நீயெரித்தாயே
தையலே கைதை நகர் தழையவந்தாயே
சத்தியே சித்தியே தாயான அம்மையே
அம்மா எனக்கினிய அம்மா என்னம்மா
அரலோக பரலோக ஆதி நீயம்மா
கம்மாளனைப் பழி விளைத்தது நீஅம்மா
கனலிட்டு மதுரையை எரித்தது நீயம்மா
வெம்மைதரும் அக்கினி தனித்தது நீயம்மா
வேந்தனிட மார்புருக விட்டது நீயம்மா
மும்மாரி பொழியவரு கைதை நகருறைகின்ற
முத்து விளையாடலை அகற்றியருள்தாயே
தாயே இவ்வுலகிலுள்ளோர் செய்பிழைகளாலோ
தான்தோன்றுமப்பர் தன்குறைகள் தன்னாலோ
காவேரி கடவுள் அயன் மாலருளினாலோ
கதிரைநகர் முருகரிட கட்டளைகளாலோ
பேய்களுடனாடு வைரவர் கொடுமையாலோ
பெலவீரர் முக்கோடி தேவர் பகையாலோ
மாயமாய் வந்திடும் துயர்குறைகளாலோ
மண்முனைப்பதி தழைய வந்த கண்ணகையே
கண்ணாயிரம் பெற்ற அரசர் குறைதானோ
கயிலை உமைகாளி நவசத்தி குறைதானோ
பண்ணாயிரம் பெற்ற வாணி குறைதானோ
பலகலை தெரிந்த பல முனிவர் குறைதானோ
எண்ணாயிரம் சத்தி பூமாது நாமாது
எவர்கள் குறையானாலும் நியதனை மாற்ற
வண்ணோர்கள் புகலவரு கைதை நகருறைந்த
வேத வேதாந்த வினை தீர அருள்மாதே
வினைகளது முடுகுமோ பிணிதுயர்கள் முடுகுமோ
வேறுமொரு துட்டப்பசாசுகள் அணுகுமோ
கனவிலும் முடுகுமோ வேறு சஞ்சல நோய்கள்
கயரோக முதலான பலபிணிகள் முடுகுமோ
திகையனவிலாயினும் உனை நம்மினோர்கும்
திகழ்முத்து விளையாடல் தேசத்தில் வருமோ
வனையகுழல் அழகுகுல வனிதையே தைகைநகர்
வாழ்கின்ற கண்ணகைத் தாயை முறையிடவே
முறையான செல்வி உனக்கோல மேலாம்
மோகனக்குயிலே உனக்கோல மோலம்
மறைவாணர் குயிலே உனக்கோல மோலம்
மாநாகர் புதல்வி உனக்கோல மோலம்
குறையாத கொம்பே உனக்கோல மோலம்
கோபலன் பாரி உனக்கோல மோலம்
கறைமிடற்றரனுதவு கைதை நகருறைகின்ற
கண்ணகைத்தாயே உனக்கோலமம்மா
அம்மா நீ மாறன்விளி மாற்றினது பொய்யோ
அத்தனருளாலுலகில் உற்றது நீபொய்யோ
கம்மாளனைப் பழிவிழைத்தது நீபொய்யோ
கனலிட்டு மதுரையை எரித்தது நீபொய்யோ
வெம்மைதரும் அக்கினி தணித்தது நீபொய்யோ
வேந்தனிட மார்புருக விட்டது நீபொய்யோ
செம்மையுறு கைதைநகர் காத்தது நீபொய்யோ
தேவியே நின்னருளுகிப்ப பொய்யோ
பொய்யனவே சமயங்கள் வரமுறையே முறையோ
புதிய பலதுயர்கள்வர முறையோ முறையோ
செய்ய கோதாரிவர முறையோ முறையோ
செய்யவைசூரிவர முறையோ முறையோ
பொய்களவு கொலைகள் வரமுறையோ முறையோ
புகலரிய பிணிகள் வரமுறையோ முறையோ
வையமது உய்யாதிருப்பதும் முறையோ
மாரிடர்கள் கலங்குவதும் முறையோ சொல்லம்மா
சொல்லரிய ஒங்காரமானாய் நமோநம
துய்யதோர் நவகோண முற்றாய் நமோநம
வல்லதொரு றீங்காரமானாய் நாமோநாம
வணிகர்குல மானாகர் மக--ள நமோநம
நல்லதொரு திதம்பர முகந்தாய் நமோநம
நாரி கெவுமாரி திரிசு--லி நமோநம
தில்லை நடமாடு சிவகாமி நமோநம
தேவியே கைதைநகர் வாழ்வு சவுந்தரியே
சவுந்தரி துரந்தரி மாதங்கி நீயம்மா
சஞ்சலமகற்றவர நாளில்லையோ அம்மா
வரந்தர உனக்கு மனமில்லையோ அம்மா
மானியர் செய்பிழை பொறுத்தருள் நீயம்மா
துரந்தரி உன்மக்கள் மனை காத்தருள் நீயம்மா
சூட்சாதி சூட்சமுறு சுந்தரி நீயம்மா
செகந்தழைய உன்மனமிரங்கி யாருளம்மா
தேவியே கைதைநகர் வாழுமம்பிகையே
வாழ்கின்ற கைதைநகர் மானிடர்க்காகவும்
மன்றாடி உனது மலர் பணிவதற்காகவும்
ஆழ்கின்ற தான்தோன்று அப்பருக்காகவும்
ஐங்கரன் மாலயன் அறுமுகற்காகவும்
நீழ்கின்ற உனதுபுகழ் பாடினோர்க்காகவும்
நின்னுடைய கட்டாடி மார்களுக்காகவும்
சூழ்கின்ற கைதைநகர் வைசூரி மாற்றுவாய்
துரைராசர் தொழவந்த துய்ய கண்ணகையோ
கண்ணகைத்தாயே உனக்கு மங்களமே
கஞ்சமலர்மாதே உனக்கு மங்களமே
அண்ணல் மாதங்கையே உனக்கு மங்களமே
அகில புவனங்கள் பெருக மங்களமே
வண்ணமுறு தாயே உனக்கு மங்களமே
மானாகர் புதல்வியே உனக்கு மங்களமே
திண்ணமிகு கைதைநகர் தழைய மங்களமே
செல்வி நுாபுரபதம் வாழ்க மங்களமே
மங்கையுமை பூமாதும் நாமாதும் வாழி
மற்றுமுள நவகோண சத்திகளும் வாழி
திங்களணி ஈசர் திருமாலயனும் வாழி
திகழ்கதிரை முருகரிட செய்யபதம் வாழி
வங்கமுறு வணிகர் வேளாளரும்வாழி
வரிசைபெறு குகன் மரபுள்ளோர்களும் வாழி
கங்கைதிகழ் மண்முனைக் கண்ணகைத்தாயார்
கமல பொற்பாதம் மிகவாழ்க வழியதே