புராதன மட்டக்களப்பு நுழைவாயில் (BATTICALOA GATE)மட்டக்களப்பு வாயில் (Batticaloa Gate) என்பது புளியந்தீவில் அமைந்திருந்த புராதன துறைமுக தரையிறக்கப் பகுதியில் அமைந்துள்ள ஓர் நினைவுச் சின்னம். முன்பு இதன் மூலமே மட்டக்களப்பு பிரதான நிலப்பகுதி தீவான புளியந்தீவுடன் இணைக்கப்பட்டது. இவ்விடத்தில் மட்டக்களப்பிற்கான முதலாவது மெதடிஸ்த நற்செய்தியாளர் வண. வில்லியம் ஓல்ட் 1814 இல் தரையிறங்கியதாக நம்பப்படுகின்றது. அவரின் சிலையும் மட்டக்களப்பு வாயில் நினைவுச் சின்னத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது