எம்மைப்பற்றி

வணக்கம்,

ம்மியும் குழவியும் காணும் கடைசி சந்ததி நாமாகத்தான் இருப்போம் என்பது ஜீரணிக்க முடியாத ஒரு கசப்பான உண்மை. இந்த நிலை காலத்தின் தேவையாக இருந்தாலும் எம் முன்னோர்களின் தொழிநுட்பமும் திறனும் வியக்கத்தக்கதாகும். அவசர உலகுக்கு அவை பொருந்தாவிடினும் மனிதவாழ்வுக்கும் சூழலுக்கும் பயனுள்ளதும் பாதிப்பற்றதும் ஆகும். அவசர வாழ்வு என்பது நாம் ஏற்படுத்தியது தானே? இருந்தாலும் அழிந்து போகின்ற என்பதை விட எம்மால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற எமது பண்பாடு , விழுமியங்கள் , கலைகள் என்பவற்றை எம்மால் இயலுமான வரையில் இயலுமான வடிவங்களில் எமது அடுத்துவரும் சந்ததியினருக்குக் கொடுக்கும் ஒரு முயற்சியே இது. இவ் இணையத் தளத்திற்கு பங்களிப்புச் செய்ய ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் இணையலாம். அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களை எமக்கு அறிமுகப்படுத்தலாம் மற்றும் உங்கள் மேலான கருத்துக்களை எமக்குத் தரலாம் அவை மிகவும் வரவேற்கப்படுகின்றன.